கேள்விக்குறியாகும் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி

April 29, 2022

உக்ரைனில் பட்டப்படிப்பு படிக்கச் சென்ற மகனோ, தங்கையோ, நண்பனோ, உறவுக்காரப் பெண்ணோ, தெரிந்தவரின் பிள்ளையோ இன்று உயிரோடு தாயகம் திரும்ப வேண்டும் என்று நீங்கள் இந்தச் சமயத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

உக்ரைனில் பட்டப்படிப்பு படிக்கச் சென்ற மகனோ, தங்கையோ, நண்பனோ, உறவுக்காரப் பெண்ணோ, தெரிந்தவரின் பிள்ளையோ இன்று உயிரோடு தாயகம் திரும்ப வேண்டும் என்று நீங்கள் இந்தச் சமயத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருப்பீர்கள். அவர்களின் உயிர் நிச்சயம் காப்பாற்றப் பட்டு விடும் என்பது அரசு அளிக்கும் உறுதி. ஆனால், அதே சமயத்தில், அவர்களுடைய பட்டப்படிப்பின் நிலை என்ன என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

உக்ரைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களே மிக அதிகம். “LevearageEdu” வின் சேர்க்கை அறிக்கையின் படி, 19000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் பயில்கிறார்கள். பெரும்பாலும் மருத்துவம், பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார் பட்டப்படிப்பு ஆகியவற்றில் பெருமளவில் இந்தியர்கள் பயில்கிறார்கள். இந்தியாவில் தனியார் கல்லூரியில் படிப்பதை விட உக்ரைன் பல்கலைக்கழகங்களில் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதால், இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக உக்ரைன் நாடு இருக்கிறது. தற்போது, அங்குள்ளப் பெரும்பாலான மாணவர்கள் தங்களது இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்கள்.

ஒருபுறம் உக்ரைனில் பயிலும் மாணவர்களுக்கு இந்த நிலை என்றால், மறுபுறம் ரஷ்ய நாட்டின் மீது உலகின் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதனால், ரஷ்யாவில் பயிலும் மாணவர்களின் கல்வித் தகுதி, பிற நாடுகளில் செல்லாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதனால், அங்கு பட்டப்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களின் நிலையும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

உக்ரைனில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த நிலையில் அவர்களின் கல்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் பலரும் பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள இந்த நிலையில், அவர்களைப் பத்திரமாக வெளியேற அறிவுறுத்துகிறது இந்திய வெளியுறவுத் தூதரகம். பொதுவாகப் போர் என்ற அரக்கன் கல்வியை விழுங்கியதாகச் சரித்திரம் இல்லை. அதனால், உக்ரைனில் இயல்பு நிலைத் திரும்பியதும், இவர்களின் கல்வி மீண்டும் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

குழந்தைகள் உரிமைகள் குறித்த ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய், இது குறித்து கூறுகையில், கல்வியைப் பாதியில் விட்டு இந்தியா வரும் மாணவர்கள், குறிப்பிட்டத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள கல்லூரிகளிலேயே தங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu