சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு

April 21, 2023

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலக்காடு அருகில் உள்ள அட்டப்பாடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சிறுவாணி ஆறு மற்றும் பவானி ஆறு ஆகிய இரண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், வாரியத்தில் முறையான அனுமதி பெறாமல் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டி வருவதாகவும், கூறப்படுகிறது. மேலும், இந்த தடுப்பணைகளை […]

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலக்காடு அருகில் உள்ள அட்டப்பாடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சிறுவாணி ஆறு மற்றும் பவானி ஆறு ஆகிய இரண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், வாரியத்தில் முறையான அனுமதி பெறாமல் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டி வருவதாகவும், கூறப்படுகிறது. மேலும், இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால், கோவை மாவட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu