கால்வாயில் இருந்து நீர் மின் உற்பத்தி - கேரளாவில் தொடக்கம்

கேரள மாநிலம் பாலக்காட்டில், முதல்முறையாக, கால்வாய்களிலிருந்து நீர் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் பாயும் நீரின் அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தற்போது கேரள மாநில மின் வாரியம் வழங்கியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில், கம்பலாத்துறை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில், நீரின் அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 5 கிலோ வாட் திறன் கொண்ட 2 நீர் சக்கர ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. […]

கேரள மாநிலம் பாலக்காட்டில், முதல்முறையாக, கால்வாய்களிலிருந்து நீர் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் பாயும் நீரின் அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தற்போது கேரள மாநில மின் வாரியம் வழங்கியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில், கம்பலாத்துறை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில், நீரின் அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 5 கிலோ வாட் திறன் கொண்ட 2 நீர் சக்கர ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இவை, கால்வாயில் 5 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக தண்ணீர் விழும் பகுதியில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. திருச்சூர் ஜெனரேட்டர் துறை நிர்வாக பொறியாளர் இந்த ஜெனரேட்டர்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார். இதற்கான திட்ட மதிப்பு 22.6 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீர்மின் உற்பத்தி மூலம், 1 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவு 5.04 ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu