கேரளா என்ற பெயர் இனி கேரளம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நேற்று கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில அரசு கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வமாக அனைத்து கோப்புகளிலும் கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.