ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிதி அதிகாரி லூகா மேஸ்ட்ரி, ஜனவரி 1, 2025 முதல் பதவியில் இருந்து விலகுகிறார். எனவே, அடுத்த தலைமை நிதி அதிகாரியாக ஆப்பிள் நிறுவனத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு துறை தலைவர் கேவன் பாரேக் நியமிக்கப்படுகிறார். இவர் இந்திய வம்சாவளி நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள கேவன் பாரேக், நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் இணைக்கப்படுகிறார். ஆப்பிள் தலைவர் டிம் குக், பாரேக்கின் நிபுணத்துவத்தை பாராட்டி பேசி உள்ளார். கேவன் பாரேக், கடந்த 2013 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முன்னதாக, தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.