கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்கம்

January 20, 2024

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி நேற்று நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் முதல் முறையாக கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது. சென்னையில் ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி கோலாகலமாக நேற்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார். நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தரும் வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தையும் ரசித்தப்படியே பயணம் செய்தார். அங்கு அவருக்கு […]

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி நேற்று நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது. சென்னையில் ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி கோலாகலமாக நேற்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தார். நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தரும் வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தையும் ரசித்தப்படியே பயணம் செய்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், தமிழக இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது நேற்று முதல் 31ஆம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu