கியா இந்தியாவின் நவம்பர் மாத விற்பனை 69% உயர்வு

December 1, 2022

கியா இந்தியா வாகன நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 69% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில், 24025 கியா நிறுவன வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதுவே, கடந்த வருடம் 14214 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. வாகன விற்பனை உயர்வு குறித்து கியா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைவேந்தர் ஹர்தீப் சிங் பிரார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக, எஸ்யூவி ரக கியா வாகனங்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகியுள்ளன. செல்டோஸ் மாடலில் 9284 வாகனங்களும், செனேட் மாடலில் 7834 […]

கியா இந்தியா வாகன நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 69% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், 24025 கியா நிறுவன வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதுவே, கடந்த வருடம் 14214 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. வாகன விற்பனை உயர்வு குறித்து கியா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைவேந்தர் ஹர்தீப் சிங் பிரார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எஸ்யூவி ரக கியா வாகனங்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகியுள்ளன. செல்டோஸ் மாடலில் 9284 வாகனங்களும், செனேட் மாடலில் 7834 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக, காரன்ஸ் ரக வாகனம் 6360 என்ற எண்ணிக்கையிலும், கார்னிவல் ரக வாகனம் 419 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளன. அத்துடன், கடந்த மாதம், 128 மின்சார வாகனங்களும் (EV6) இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை, மொத்தமாக 296 மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu