கியா இந்தியாவின் டிசம்பர் மாத உள்நாட்டு விற்பனை 94.7% உயர்வு

January 3, 2023

தென் கொரிய வாகன நிறுவனமான கியா, தனது இந்தியப் பிரிவின் டிசம்பர் மாத உள்நாட்டு விற்பனை 94.7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், 15184 கியா வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக, 336619 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு, கியா நிறுவனத்தின் விற்பனையில் 47.7% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டில் 254556 வாகனங்களும், வெளிநாட்டில் 82063 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. எனவே, உள்நாட்டு வாகன விற்பனையில் 40.1% உயர்வு […]

தென் கொரிய வாகன நிறுவனமான கியா, தனது இந்தியப் பிரிவின் டிசம்பர் மாத உள்நாட்டு விற்பனை 94.7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், 15184 கியா வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக, 336619 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு, கியா நிறுவனத்தின் விற்பனையில் 47.7% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டில் 254556 வாகனங்களும், வெளிநாட்டில் 82063 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. எனவே, உள்நாட்டு வாகன விற்பனையில் 40.1% உயர்வு பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் பிரார், "கியா நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 2019 ல் பெரிய அளவிலான உற்பத்தியை தொடங்கியது. அப்போது தொடங்கி 41 மாதங்களில், 8 லட்சம் வாகன விற்பனை இலக்கை எட்டியுள்ளது. கொரோனா பரவல் சமயத்தில், ஏற்பட்ட விநியோகச் சங்கிலி சிக்கல்கள், விலை உயர்வுகள் ஆகியவற்றைத் தாண்டி, இந்திய விற்பனையில் சாதித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu