இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா விரைவில் இந்தியா வருவதாக தகவல்.
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், 2019-ம் ஆண்டு இளவரசராக இருந்தபோது இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். பின்னர், 2022-ம் ஆண்டு அவர் இந்திய பயணத்திற்கு திட்டமிட்டு இருந்தார், ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, 76 வயதான மன்னர் சார்லஸ், கடந்த ஆண்டு தொடக்கத்தில் புற்றுநோயுக்கான சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். அந்த வகையில், அவர் தனது மனைவி ராணி கமிலாவுடன் இந்தியா வந்து, பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் செல்லும் அரசு முறை பயணம் விரைவில் திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது.