இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர் மாற்றங்கள் அறிவிப்பு

March 23, 2023

இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிர்வாகக் குழுவில் சுயாதீன நிர்வாகியாக செயல்பட்டு வந்த கிரண் மசுந்தார் ஷா நேற்றோடு பணி ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், சுயாதீன நிர்வாகிகள் தலைவராக டி. சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் பரிந்துரை கமிட்டி அறிவுறுத்தலின்படி இவரது நியமனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "கிரண் மசுந்தார் ஷா, பயோகான் நிறுவனத்தின் தோற்றுநர் ஆவார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுயாதீன நிர்வாகியாக செயல்பட்டு […]

இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிர்வாகக் குழுவில் சுயாதீன நிர்வாகியாக செயல்பட்டு வந்த கிரண் மசுந்தார் ஷா நேற்றோடு பணி ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், சுயாதீன நிர்வாகிகள் தலைவராக டி. சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் பரிந்துரை கமிட்டி அறிவுறுத்தலின்படி இவரது நியமனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கிரண் மசுந்தார் ஷா, பயோகான் நிறுவனத்தின் தோற்றுநர் ஆவார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுயாதீன நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். அவரது பனிக்காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக் குழுவில் உள்ள டி. சுந்தரம் இன்போசிஸ் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் தீட்டுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். எனவே, அவர் தலைமை சுயாதீன நிர்வாகியாக அறிவிக்கப்படுகிறார்" என்று இன்போசிஸ் சேர்மன் நந்தன் நீலகேணி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu