நீதிபதிகள் நியமனம் குறித்து, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியோருக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வந்தது. இதன் விளைவாக, கிரண் ரிஜிஜு விடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு, அர்ஜுன் ராம் மேவால் புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் நியமனம், கொலிஜியம் விவகாரம் ஆகியவை சார்ந்து, இந்த மாற்றம் நிகழ்ந்ததாக பேசப்படுகிறது. இந்த அமைச்சர்கள் மாற்றத்துடன் சேர்த்து, சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி சிங் பாகல், சுகாதாரத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.