டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமனம்

March 17, 2023

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கீர்த்தி வாசன் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே நிறுவனத்தின் நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவின் தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் 34 வருட பணி அனுபவம் கொண்டவர் ஆவார். நிறுவனத்தில் […]

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கீர்த்தி வாசன் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே நிறுவனத்தின் நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவின் தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் 34 வருட பணி அனுபவம் கொண்டவர் ஆவார்.

நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ள ராஜேஷ் கோபிநாத், ஆறே வருடங்களில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு 10 பில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக வருமானம் ஈட்டி தந்துள்ளார். மேலும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை 70 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக உயர்த்தியுள்ளார். அவர் வேறு சில வாய்ப்புகள் தேடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu