ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் -ல் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் கேகேஆர் மற்றும் ஹீரோ குழுமம்

September 21, 2022

அமெரிக்காவின் தனியார் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர் மற்றும் ஹீரோ குழுமம் ஆகியவை இணைந்து, சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு ஹீரோ குழுமத்தின் சூரிய சக்தி, காற்றாலைகள், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கேகேஆர் நிறுவனத்தின் பங்குதாரர் ஹர்திக் ஷா, “எரிசக்தி தேவை வேகமாக வளர்ந்து வரும் இன்றைய […]

அமெரிக்காவின் தனியார் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர் மற்றும் ஹீரோ குழுமம் ஆகியவை இணைந்து, சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு ஹீரோ குழுமத்தின் சூரிய சக்தி, காற்றாலைகள், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கேகேஆர் நிறுவனத்தின் பங்குதாரர் ஹர்திக் ஷா, “எரிசக்தி தேவை வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நிலையில், பல்வேறு நிறுவனங்களை கார்பன் இல்லா நிறுவனங்களாக மாற்றுவதற்கு, ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்கு முதன்மையாக உள்ளது. இது தொடர்பாக நிறுவனத்துடன் இணைந்து, தீவிரமாக பணியாற்ற உள்ளோம்” என்றார். கேகேஆர் நிறுவனத்தின் முதலீட்டில், ஜேபி மோர்கன் முக்கிய ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அபுதாபி ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனம் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளது. தற்போது, கேகேஆர் நிறுவனத்தின் முதலீடு காரணமாக, ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று கூறப்படுகிறது.

கேகேஆர் நிறுவனத்தின் முதலீடு குறித்து பேசிய ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் முஞ்சால், “இந்திய அரசு, 2030 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் மொத்த எரிசக்தியில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. கேகேஆர் நிறுவனத்தின் முதலீடு மூலம் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனம், இந்தியாவின் இலக்கை அடைய துணை நிற்கும். மேலும், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu