கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கொலையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கொல்கத்தாவில், ஆர். ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்முறை மற்றும் கொலையால் கொல்லப்பட்டார். இதில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்nபணியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.