கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு

January 20, 2025

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு, கொல்கத்தாவின் சியால்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை 9-ம் தேதி நிறைவடைந்தது. […]

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு, கொல்கத்தாவின் சியால்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை 9-ம் தேதி நிறைவடைந்தது. அதன் படி, சி.பி.ஐ. தண்டனை விதிக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றவாளி என சஞ்சய் ராய்க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu