ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பில் சால்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை வீழ்த்தி சுலபமாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி போட்டியின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது. இதனை அடுத்து கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.