கோட்டக் மஹிந்திரா வங்கி காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் 4% உயர்வு

கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கணிப்புகளை விட அதிகமாக காலாண்டு முடிவுகள் பதிவாகியுள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா பங்குகள் கிட்டத்தட்ட 4.2% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையில் கோட்டக் மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பங்கு 1612 ரூபாயாக இருந்தது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் தனிப்பட்ட லாபம் 18.22% உயர்ந்து 4133.3 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி […]

கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கணிப்புகளை விட அதிகமாக காலாண்டு முடிவுகள் பதிவாகியுள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா பங்குகள் கிட்டத்தட்ட 4.2% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையில் கோட்டக் மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பங்கு 1612 ரூபாயாக இருந்தது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் தனிப்பட்ட லாபம் 18.22% உயர்ந்து 4133.3 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய், 13% உயர்ந்து 6909 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜே பி மோர்கன் உள்ளிட்ட பங்குச் சந்தை முகமை நிறுவனங்கள், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு சாதகமான எதிர்காலம் உள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளன. இவற்றின் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu