ஒரு வருட வீழ்ச்சியில் கோட்டக் மஹிந்திரா பங்கு மதிப்பு

கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு மதிப்பு இன்று ஒரு வருட வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 4% அளவுக்கு கோட்டக் மஹிந்திரா பங்குகள் வீழ்ச்சி அடைந்தது. கோட்டக் மஹிந்திரா வங்கியின் கூட்டு நிர்வாக இயக்குனர் கே வி எஸ் மணியன் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குகள் வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய ரிசர்வ் […]

கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு மதிப்பு இன்று ஒரு வருட வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 4% அளவுக்கு கோட்டக் மஹிந்திரா பங்குகள் வீழ்ச்சி அடைந்தது. கோட்டக் மஹிந்திரா வங்கியின் கூட்டு நிர்வாக இயக்குனர் கே வி எஸ் மணியன் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குகள் வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன், புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அப்போது முதல் கோட்டக் மஹிந்திரா பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 10% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த சூழலில் மூத்த நிர்வாகி வெளியேறுவதாக வந்த அறிவிப்பால், ஒரு வருட வீழ்ச்சிக்கு சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு பங்கு 1561 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu