கோயம்பேடு - திருவண்ணாமலை தினசரி 85 பேருந்துகள் இயக்கத் திட்டம்

கோயம்பேடு - திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ஆம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. […]

கோயம்பேடு - திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ஆம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் சென்று வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தவாசி வழியாக 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. ஆக 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu