கோழிக்கோட்டில் 13 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கியூ லைக்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவுகிறது. மேலும் இவ்வகை மூளை காய்ச்சல் வேறு யாருக்கும் பரவி உள்ளதா என சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் வேறு யாருக்கும் இது பரவவில்லை. இந்த நோயின் அறிகுறிகளாக தலைவலி, சோம்பல், காய்ச்சல் உள்ளிட்டவைகளே இருக்கின்றன. எனவே மேற்கண்ட அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.














