நேபாளத்தில் சர்மா ஒலி ஆட்சியமைக்க உரிமை கோரினார்

July 13, 2024

நேபாள முன்னாள் பிரதமர் பி கே சர்மா ஒலி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். நேபாளத்தில் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் பிரசந்தா பிரதமராக இருந்தார். இவருக்கு முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற கட்சிகள் ஆதரவளித்து வந்தன. இந்நிலையில், பிரசந்தா தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிரசந்தாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது […]

நேபாள முன்னாள் பிரதமர் பி கே சர்மா ஒலி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.

நேபாளத்தில் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் பிரசந்தா பிரதமராக இருந்தார். இவருக்கு முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற கட்சிகள் ஆதரவளித்து வந்தன. இந்நிலையில், பிரசந்தா தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிரசந்தாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் புதிதாக ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் பி கே சர்மா ஒலி உரிமை கோரி உள்ளார். ஆட்சி அமைப்பதற்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சர்மாவுக்கு 165 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்நிலையில், இந்த உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் சர்மா ஒலி நேற்று தீபக் ராமச்சந்திர படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதையடுத்து நேபாளத்தில் புதிய பிரதமராக பி கே சர்மா ஒலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu