மேலை நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுதம் விநியோகிக்கப்படும் - புதின்

June 7, 2024

உக்ரைனுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கினால் அந்த நாடுகளுடைய எதிரிகளுக்கு அதே போல் ரஷ்யா ஆயுதங்கள் வழங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, […]

உக்ரைனுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கினால் அந்த நாடுகளுடைய எதிரிகளுக்கு அதே போல் ரஷ்யா ஆயுதங்கள் வழங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, உக்ரைனுக்கு தொலைதூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்குகின்றன. அந்த ஆயுதங்களை கொண்டு ரஷ்யா அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவினால் அந்த நாடுகளின் எதிரிகளுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை ரஷ்யா வழங்கும். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. இது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

சமீபத்தில் ஜெர்மனியும், அமெரிக்காவும் தங்கள் ஆயுதங்களை உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu