பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் : அமைச்சர் சேகர்பாபு 

January 20, 2023

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி […]

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி 27-ந்தேதி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி கோயிலில் இருந்து இடும்பன் வரை ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu