டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இங்கு போதுமான அளவு நீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடைமடை வரை தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடி மிகவும் பாதித்துள்ளது.
இதற்கு வேளாண்மை துறை ஆணையம் மற்றும் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பதிலாக சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்கவும், பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உரிய கணக்கெடுப்பில் நடத்தி வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறுவை சாகுபடி பாதிப்பை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல் அமைச்சர் இன்று சென்னை தலைமை இடத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் வேளாண்மை துறை, அமைச்சர், செயலாளர் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.