குவைத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
குவைத் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால் அங்கு பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். மேலும் அங்கு பலர் குடும்பமாகவும், சிலர் தனியாகவும் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தரும் குடியிருப்புகளில் தான் தங்கி வருகின்றனர். அவ்வகையில் குவைத்தில் இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமது அரசுக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்து காரணமாக சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். மேலும் 3 தமிழர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது