உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 53 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று அதிகாலை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 53 பேர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, கீவ் நகர் மீது ரஷ்ய படையினர் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசினர். இதில் எட்டு சிறுவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்தனர். உக்ரைனை நோக்கி 10 ஏவுகணைகள் வீசப்பட்டது. அவை அனைத்தையும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடுமையான பனிக்காலம் என்பதால் அண்மை காலமாகவே உக்ரைன் போர் தடைபட்டு வந்தது. இருப்படையினரும் முன்னேறி செல்ல முடியாத நிலை உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதேச உதவிகளை வேண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.