புத்தாண்டு தினமான நேற்று, உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்று காலை, கிட்டத்தட்ட 90 ட்ரோன் தாக்குதல்கள் கீவ் நகரம் மீது நிகழ்ந்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 16 Tu-95MS விமானங்களில் இருந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் பாதுகாப்புத்துறை திறம்பட செயலாற்றி 87 ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக கீவ் நகரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் போது, சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.