சீனாவில் கிங் கோப்பையில் லக்ஷயா சென் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
சீனாவில் நடக்கும் சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலக தர வரிசையில் 12-ஆம் இடத்தில் உள்ள சென், ஹாங்காங்கின் ஆங்கஸ் இங் கா லாங் உடன் மோதிய போது, முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி வெற்றிபெற்றார். சென் 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் சீன வீரர் ஹூ ஜே ஆன் (18) உடன் அவர் மோதவுள்ளார்.