சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் லேம்டா

February 4, 2023

டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் புதிய வரவாக வந்துள்ள சாட் ஜிபிடி, அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘லேம்டா’ என்ற புதிய தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை புதன்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கூகுள் அறிமுகம் செய்யவிருக்கும் லேம்டாவில் கலந்துரையாடல் முறையில் பயனர்கள் தகவல்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு, பல சோதனை […]

டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் புதிய வரவாக வந்துள்ள சாட் ஜிபிடி, அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘லேம்டா’ என்ற புதிய தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை புதன்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கூகுள் அறிமுகம் செய்யவிருக்கும் லேம்டாவில் கலந்துரையாடல் முறையில் பயனர்கள் தகவல்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு, பல சோதனை கட்டங்களை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. LaMDA என்பது LAnguage Model for Dialogue Applications என்பதன் சுருக்கமாக அறியப்படுகிறது. சாட் ஜிபிடி, கூகுள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், சாட் ஜிபிடிக்கு மாற்றாக கூகுள் தனியாக ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய தளம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu