மதுரை-தூத்துக்குடி புதிய அகலரயில் பாதைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடக்கம்

October 31, 2022

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகலரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தற்போது திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாட்சி வழியாக அகல ரயில்பாதை செல்கிறது. இது சுற்றுபாதையாக இருப்பதால் காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக புதியதாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதன்கீழ் நிலங்களை கையகப்படுத்தும்படி மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இந்த திட்டத்திற்கு தற்போது மதுரை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. […]

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகலரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தற்போது திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாட்சி வழியாக அகல ரயில்பாதை செல்கிறது. இது சுற்றுபாதையாக இருப்பதால் காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக புதியதாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதன்கீழ் நிலங்களை கையகப்படுத்தும்படி மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

இந்த திட்டத்திற்கு தற்போது மதுரை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரிலிருந்து சூரக்குளம், பெரிய ஆலங்குளம், வளையங்குளம், திருமங்கலம் அருகேயுள்ள பெரியகூடக்கோவில், பாரபத்தி உள்ளிட்ட பகுதிகளில் புதிய அகலரயில் பாதை பணிக்கான நிலங்களை அளவீடு செய்தும் அவற்றை முறைப்படி கையகப்படுத்தும் பணிகளிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து பின்பு மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், நிலையூர், வளையங்குளம், பாரபத்தி, கூடக்கோவில், காரியாபட்டி வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகலரயில்பாதை அமைக்கும் பணிகள் துவங்கும் என தெரிய வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu