நிலவினை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்தில் லேண்டெர் ரோவர் கருவிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
நிலவினை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் லேண்டெர்,ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருந்தது. அங்கு 14 நாட்களுக்கு நிலவில் தரையிறங்கி தனது பணிகளை சிறப்பாக செய்து இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது. அங்கு இரவு காலம் தொடங்கியதால் இவை உறக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது பகல் தொடங்கிய நிலையில் உறக்க நிலையில் இருந்து எழுப்பும் முயற்சியில் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இவற்றில் இருந்து எந்தவித தகவலும் தெரியவில்லை. ஆனால் 14 பூமி நாட்கள் வரை நாம் காத்திருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும் காலகட்டத்தில் அது எப்போது செயல்படும் என்று கணிக்க வழி இல்லை. இரண்டு கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.