நிலச்சரிவால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடிரென அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.