இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குல்லுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்த போது இந்த விபத்து நடந்தது. இதனால் 6 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்களுடன் சேர்ந்து ஜாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குலு துணைத் தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்தார்.