நீலகிரி மாவட்டதில் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளாயம்-ஊட்டி ரெயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. மண் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததால், ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெயில் பாதையை சீரமைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், ஆனால் பணிகள் விரைவில் முடிக்க முடியவில்லை. இதனால், மலைரெயில் சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது, சீரமைப்பு பணி முடிந்த பிறகு மீண்டும் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.