உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதைகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் பெரும்பான்மையானவை நீரில் மூழ்கியுள்ளன. இதில் சிக்கி 75க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதில் உத்திரபிரதேச மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதை உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பத்ரிநாத் செல்லும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாளை காலை நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது














