கேரளாவில் பல்வேறு இடங்களில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழையின் காரணமாக சில இடங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டம் வெள்ளணியில் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் சேறு நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல்வேறு பயிர்கள் சேதம் ஆகியுள்ளன. அதேபோல் கோட்டையம் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஈரெட்டுப்பட்டியில் வாகமண் வீதியில் மண் சரிவு ஏற்பட்டு அங்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட பகுதியை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.