ஆந்திர பிரதேசத்தில் 15 அரிய வகை கனிமங்கள் கண்டுபிடிப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது, ஆந்திர பிரதேச மாநிலத்தில் 15 அரிய வகை கனிமங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தேசிய புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக, லந்தனைடு எனப்படும் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, கைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு தொழில் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் கனிமமாக சொல்லப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில், இந்த […]

கடந்த சில வாரங்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது, ஆந்திர பிரதேச மாநிலத்தில் 15 அரிய வகை கனிமங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தேசிய புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக, லந்தனைடு எனப்படும் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, கைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு தொழில் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் கனிமமாக சொல்லப்படுகிறது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில், இந்த கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அலானிட், செரியட், தோரைட், கொலம்பைட், டன்டலைட், ஜிர்கான், மோனாசைட், பைரோகிளோர் யூக்ஸநைட், ப்ளூரைட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுபோக, 5.9 மில்லியன் டன் அளவில் லித்தியம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள லித்தியம் முறையாக பயன்படுத்தப்பட்டால், மின்சார வாகனச் சந்தையை இந்தியா ஆளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu