தெற்கு ரெயில்வே கடந்த ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
கடந்த 2022-23 நிதியாண்டில் 10,703 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2021-22-ம் ஆண்டை விட 47 சதவீதம் அதிகமாகும். 2018-19-ம் ஆண்டில் இதன் வருவாய் ரூ.9,055 கோடியாக இருந்தது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, சரக்குகள் கையாள்வது உயர்வு போன்றவற்றால் வருவாய் உயர்ந்துள்ளது. பயணிகள் பயணம் செய்ததன் மூலம் கடந்த நிதி ஆண்டில் தெற்கு ரெயில்வேக்கு ரூ.6,345 கோடி கிடைத்தது. 2021-22 நிதியாண்டில் ரூ.3,539 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் இது 80 சதவீதம் உயர்வாகும்.
5,240 கோடி மக்கள் கடந்த நிதியாண்டில் பயணித்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 88.5 சதவீதம் அதிகமாகும். 339.6 மில்லியன் கோடி பேர் பயணம் செய்த நிலையில் தற்போது முடிந்த நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதே போல 2022-23-ம் ஆண்டில் தெற்கு ரெயில்வே 37.94 மில்லியன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரூ .3637.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்தார்.














