உத்திரபிரதேசத்தில் 3000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலை தொடக்கம்

February 28, 2024

உத்திரபிரதேச மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ஆலையை தொடங்கியுள்ளது. கான்பூரில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவில், ஆயுத உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் வெடிமருந்து ஆலை ஆகும். நேற்று, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த ஆலையை தொடங்கி வைத்தார். இதன் மூலம், 4000 பேருக்கு வேலை வாய்ப்பு […]

உத்திரபிரதேச மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ஆலையை தொடங்கியுள்ளது.

கான்பூரில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவில், ஆயுத உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் வெடிமருந்து ஆலை ஆகும். நேற்று, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த ஆலையை தொடங்கி வைத்தார். இதன் மூலம், 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த ஆலையில், நிகழாண்டில் 15 கோடி துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறினார். இது இந்தியாவின் ஒட்டுமொத்த துப்பாக்கி குண்டு தேவையில் 25% ஐ பூர்த்தி செய்யும் என தெரிவித்தார். இது தவிர, இந்த ஆலையில் ஏவுகணைகளும் தயாரிக்கப்பட உள்ளதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu