ஆன்லைன் வாயிலாக படிக்கும் விர்ச்சுவல் பள்ளியை டெல்லி அரசு துவக்கியுள்ளது.
டெல்லியில் பள்ளிக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைன் வாயிலாக கல்வி பயிலும் வகையில், விர்ச்சுவல் பள்ளியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா ஊரடங்கால் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக படித்தனர். அதனை அடிப்படையாக கொண்டு இந்த விர்ச்சுவல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில், நாட்டின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் கல்வி பயிலலாம். இதில் 9 முதல் 12 வகுப்புகள் வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன.
நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட முதல் விர்ச்சுவல் பள்ளி இதுவே ஆகும். இதில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் மாநில கல்வி வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும்.
மேலும், இதில் சேரும் மாணவர்களுக்கு 'நீட், க்யூட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.