இந்தியாவைச் சேர்ந்த பிரபல மின்னணு நிறுவனமான லாவா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி கைபேசி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 17999 ரூபாய் ஆக சொல்லப்பட்டுள்ளது.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி கைபேசியில் பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 6.7 இன்ச் 3டி curved Amoled டிஸ்ப்ளே உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைபேசி 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும், 64 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்புத் திறன் அடிப்படையில், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய 2 வகையறாக்களில் கைபேசிகள் வெளியாகின்றன. பேட்டரியை பொறுத்தவரை, 5000 எம் ஏ ஹெச் திறன் கொண்டுள்ளது. மேலும், 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.