தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர சட்ட ஆணையம் பரிந்துரை

தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 124 ஏ என்கின்ற சட்டப்பிரிவு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கில் தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதையடுத்து தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் […]

தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

124 ஏ என்கின்ற சட்டப்பிரிவு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அந்த வழக்கில் தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதையடுத்து தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மாற்றங்களுடன் தேசத் துரோக சட்டத்தை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu