நாகர்கோவிலில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கூடியும், மத்திய அரசை கண்டித்தும் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் அறிவித்திருந்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் ரயில் நிலையம் நோக்கி 300 வழக்கறிஞர்கள் புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி வழக்கறிஞர்கள் சென்றதன் காரணமாக 300 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்