மெட்டா நிறுவனம், கடந்த ஆண்டு இறுதி முதல் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, நிறுவனத்தின் பணி நீக்கம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கருத்துப்படி, நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்காக, மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணி நீக்கத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ரியாலிட்டி லேப்ஸ் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்திலிருந்து, 10000 பணியிடங்கள் இந்த முறை வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், மெட்டா ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.














