லெபனான் சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக, இஸ்ரேல் கடந்த மாதம் 23-ந்தேதி லெபனானில் பெரும் வான்வழி தாக்குதலை தொடங்கியது. தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு, இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டன.இந்நிலையில்,லெபனான் சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல், லெபனான் மீது மேலும் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.














