அடுத்த தேர்தலுக்குள் பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைமை பொறுப்பை துணை பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் கொடுக்கப் போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்தார்.சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பிரதமருமான லீ சியென் லூங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டி உள்ளது. சிங்கப்பூரின் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் அடுத்த பொது தேர்தலுக்கு முன்பு கட்சியின் தலைமை பொறுப்பு மற்றும் பிரதமர் பதவியை ஒப்படைப்பதா அல்லது தேர்தல் முடிந்த பிறகு ஒப்படைப்பதா என்பதுதான்.ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் மாற்றம் வரும்போது பல சிக்கல்கள் எழக்கூடும். எனவே இந்த மாற்றம் குறித்து கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். லாரன்ஸ் வோங் தலைமையிலான நான்காம் தலைமுறை அணி சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலங்களில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அரசு திட்டங்கள் குறித்து கட்சியினர் மக்களுக்கு எடுத்துரைத்து தேர்தலில் கட்சி வெற்றி பெற உதவ வேண்டும் என்றார். சிங்கப்பூரில் அடுத்த பொது தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.