2 டிஸ்ப்ளே உடன் லெனோவா திங்க் புக் பிளஸ் -3ம் தலைமுறை புதிய லேப்டாப் அறிமுகம்

February 25, 2023

லெனோவா நிறுவனம், 2 டிஸ்ப்ளேயுடன் புதிய திங்க் புக் பிளஸ் 3ம் தலைமுறை லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் பல்வேறு அதிநவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 12ம் தலைமுறை இன்டல் கோர் ஐ 7 எஸ்ஓசி -ல் இயங்கும் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சமாக, வழக்கமான டிஸ்ப்ளே உடன் சேர்த்து, கீபோர்ட் அருகில் கூடுதலாக ஒரு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 17.3 இன்ச் அளவில், 21:10 அல்ட்ரா வைட் ரேஷியோவில், டோல்பி விஷன் உடன், 3k […]

லெனோவா நிறுவனம், 2 டிஸ்ப்ளேயுடன் புதிய திங்க் புக் பிளஸ் 3ம் தலைமுறை லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் பல்வேறு அதிநவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

12ம் தலைமுறை இன்டல் கோர் ஐ 7 எஸ்ஓசி -ல் இயங்கும் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சமாக, வழக்கமான டிஸ்ப்ளே உடன் சேர்த்து, கீபோர்ட் அருகில் கூடுதலாக ஒரு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 17.3 இன்ச் அளவில், 21:10 அல்ட்ரா வைட் ரேஷியோவில், டோல்பி விஷன் உடன், 3k ரெசல்யூஷனில் இதன் முதன்மை டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இரண்டாம் டிஸ்ப்ளே, 8 இன்ச் எச்டி ரெசல்யூசனில் கொடுக்கப்பட்டுள்ளது. கீபோர்டின் வலது புறம் அமைந்துள்ள இந்த இரண்டாம் டிஸ்ப்ளேவில், தொடு திரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, பேக்லிட் கீபோர்ட், ஹெச்டி இன்ஃப்ராரெட் வெப் கேமரா போன்ற வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், கிராபிக்ஸ் தேவைகளுக்காக ஒருங்கிணைந்த இன்டெல் ஐரிஸ் கிராபிக்ஸ் கார்டு இணைக்கப்பட்டுள்ளது.

இவைத் தவிர பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய இந்த லேப்டாப்பின் விலை ஒரு 194990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெனோவாவின் பிரத்தியேக விற்பனையகங்கள் மற்றும் இணைய வர்த்தகத் தளங்களில் இவற்றை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu