பிரபல கண் கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட்டில் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான டெமாசெக் முதலீடு செய்துள்ளது. மேலும், பிடலிட்டி நிறுவனமும் அதிகத் தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தெமாசெக் நிறுவனம் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்துள்ளது. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் துணை நிறுவனமாக லென்ஸ்கார்ட் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் ஆகும். கடந்த 18 மாதங்களில், 1 பில்லியன் டாலர்கள் நிதியை லென்ஸ்கார்ட் ஈர்த்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி உள்ளது. இந்த நிலையில், டெமாசெக் இடம் இருந்து நிதி பெறுவதாக வந்துள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது.














