இந்தியாவின் மத சுதந்திரத்தை நிலைநாட்ட வலியுறுத்துவோம் - அமெரிக்கா

December 7, 2022

இந்தியாவின் மத சுதந்திர சூழ்நிலை குறித்து தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா என்பதை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது. உலக நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பான பட்டியலை அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டது. அதில், மத சுதந்திரம் 'மிகவும் கவலைக்குரிய' வகையிலான நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் உள்பட 12 இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த […]

இந்தியாவின் மத சுதந்திர சூழ்நிலை குறித்து தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா என்பதை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது. உலக நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பான பட்டியலை அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டது. அதில், மத சுதந்திரம் 'மிகவும் கவலைக்குரிய' வகையிலான நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் உள்பட 12 இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த இந்தியா இந்த முறை 'கவலைக்குரிய' வகையிலான நாடு என்று பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்க வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கையில் இந்தியாவின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் பல விதமான மத நம்பிக்கைகள் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். சர்வதேச மத சுதந்திரம் குறித்த எங்கள் ஆண்டு அறிக்கையில், இந்தியா தொடர்பான சில கவலைக்குரிய தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரம் தொடர்பான சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம்' என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu