சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம்  - பிரதமர் மோடி 

January 26, 2023

நாடு 74வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களில் அந்தந்த ஆளுநர் கொடியேற்ற, டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் , நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின […]

நாடு 74வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களில் அந்தந்த ஆளுநர் கொடியேற்ற, டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் , நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார் .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu